ஞாயிறு, 20 டிசம்பர், 2009

இது துபாய் இல்ல....அபி தாபி ( ஹி ஹி ...அபு தாபி)

அபு தாபியில் ... நண்பரை பார்க்க சென்ற பொழுது .. எடுத்த படங்கள் ....



நண்பரும் ( Suresh in Blue T shirt) அவர் குடும்பமும் .... மற்றும் என் அண்ணன் , மன்னி & நண்பர் subbu ( in white t shirt)


Emirates palace என்கிற ஒரு 7 ஸ்டார் (???) ஓட்டல்.


மற(ர)க்க..முடியாத ஒரு வ்யூ


காற்றில் மிதக்கும் பறவை


நாங்களும் யூத் தான் ( ஹி ஹி !!!!)


ஷேக் ஜாயித் மஸ்ஜித்
ஷேக் ஜாயித் மஸ்ஜித்....

தரையில் விரியும் பூக்கள்

அந்திரத்தில் தொங்கும் பூக்கள்

இந்த தரை விரிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது ... அதன் பூரண அழகை புகை படத்திலும் கொடுக்க முடியாது ..... இங்கு மண்டியிட்டு தொழுகை செய்துவது தான் நாம் கொடுக்கும் மரியாதை

சுவர் ஓவியமும்....திரிஸ்டியும்


தொங்கும் விளக்கு


தரை ( நம்புங்கள்)




தொங்கும் விளக்கு

சுவரில் ஓடும் கொடிகள் .... பளிங்கு கற்களால் ஆனது


பெரிய ....????? மிக பெரிய வெளி மைதானம் ( ஆனால் பளிங்கு கற்களால் ஆனது .... சும்மா ஜில் ன்னு இருக்கும்

தூண்கள்

தண்ணீர் கிடையாது .... குதித்தால் மண்டை உடைவது உறுதி


சாய்ந்த கோபுரம் ( முடிந்த பின் நிச்சயமாக கின்னஸ் சாதனையில் வரும் )




இது துபாய் இல்ல....அபிதாபி ( ஹி ஹி ...அபுதாபி) ..

செவ்வாய், 15 டிசம்பர், 2009

நம்புங்க ... இது துபாய் தான் ....

நம்புங்க ... இது துபாய் தான் .... கரமாவுக்கு மிக அருகில் ஒரு பறவை வாசஸ்தலம் உள்ளது .... ( அவுத் மேத்தா சாலையில் ) .. நாத் அல் ஷீபா - துபாய் வரும் வழியில் உள்ளது அதில் இருந்து சில படங்கள்











செவ்வாய், 8 டிசம்பர், 2009

நானும் ரவுடி தான் .... சீ ..சீ... நானும் விளையாட்டு பிள்ளை தான் ..

என்ன எழுதுவது ..... மூளையை கசக்கி பிழிந்தாலும் ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது ...( இருந்தா தானே வரும் ).

துபாய்யை பற்றி உலகமே சர்ச்சை செய்து கொண்டிருந்த பொழுது 25 & 26 தேதிகளில், வெகு விமிரிசையாக இங்கு , ராதா கல்யாணம் நடந்தது ( இன்னும் பதிவுலகில் இது பற்றி ...அதாவது துபாய் -கடன் - வங்கி யாரும் இது வரை எழுத வில்லை ...குசும்பன் மட்டும் ஏதோ ஒரு பிண்னோட்டத்தில் , இது மீடியாவின் பார்வை என்று சொன்னதா நினைவு ...அது தான் ஓரளவுக்கு உண்மையும் கூட )

இங்கு ராதா கல்யாணம் வெகு விமிரிசையாக ந்டந்தது .



ஒரு சிறிய விளையாட்டு மைதானம் !!!!????




கடவுள் அமைத்து வைத்த ( மணல்) மேடை .... மனிதன் வடித்த சாலை


நானும் ரவுடி தான் .... சீ ..சீ... நானும் விளையாட்டு பிள்ளை தான் ..






டிசம்பர் மாதம் நல்ல குளுமையான மாதம் என்பதால், உறவினர்களை அழைத்து வருவது ரொம்பவும் காமன். நானும் என் பெரிய அண்ணா & ( ம) அண்ணியை வருவித்து உள்ளேன் .

ராதா கல்யாணம்- குழந்தைகளுக்கான ஒரு சின்ன நாட்டிய நிகழ்ச்சியில் என் பெண் யசோதா.






நாங்கள் , துபாய்யில் இருந்து சிறிது (?) தூரம் உள்ள கல்பா என்ற இடத்துக்கு போனோம் ... போகும்/வரும் வழியில் எடுத்த சில புகைப்படம்

துபாய் மரினா(Marinaa) , என்ற இடத்தில் , நான் வேலை பார்க்கும் Marriott Hotel - Group க்கு , ஒரு பெரிய ஹோடெல் உள்ளது , அதில் எங்களுக்கு குறைந்த விலையில் தங்க முடியும் என்று அறிந்து , ஒரு நாள் அங்கு தங்கினோம் ... அதில் எடுத்த சில படங்கள் .







எங்கள் அறையில் இருந்து ஒரு வ்யூ



மரினா வாக் என்ற இடம் ....




அண்ணா மன்னி , மனைவி , & குழந்தை




மற்றுமொரு வ்யூ







புதன், 18 நவம்பர், 2009

இந்த மூன்று நாட்கள்


இந்த மூன்று நாட்கள்

எதிர்பாராமல் , இல்லை எதிர்பார்த்து தான் , திடீரென்று எனக்கு மூன்று நாள் , நானும் என் மகள் ( இரண்டாம் வகுப்பு படிக்கும் ) யசோதாவும் தனியாக மூன்று நாள் ...புதன் இரவு என் மனைவி ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ணவும் செய்து வைக்கவும் புறப்பட்டு போனாள்.....

வியாழன் காலை 5.00 மணிக்கு அலாரத்தை வைத்து விட்டு, 4.30 க்கே எழுந்து விட்டேன், அடை மாவு இருந்ததால் , சின்ன சின்ன சைசில் ரெண்டு அடை வார்த்து லஞ்ச் பாக்ஸ், எடுத்து வைத்தேன், அதை செய்யும் பொழுதே பாலை காய்ச்ச ட்ரை பண்ணினேன், வழக்கம் போல பால் பொங்கி வழிந்தது ( பால் குக்கர் கிடையாது, வால் பாத்திரம் தான் ), காபி போட்டு குடித்து, குழந்தைக்கு சாக்கலேட் மில்க் தயார் செய்து, அவளை எழுப்பி, வெந்நீர் கலந்து குளிப்பாட்ட விட்டால், அவள் தண்ணீ சோப்பை தண்ணீரில் விட்டு விளையாடுகிறாள்..கோபபடாமல், தாஜா செய்து ஒரு வழியாக வெளியில் கொண்டு வந்து ..ஒரு மாதிரியாக ஸ்கூல் டிரஸ் எல்லாம் போட்டு 6.30 க்கு வீட்டின் கிழே உள்ள பஸ் ஸ்டாண்ட்க்கு வந்து ஏற்றி விட்டவுடன் தான் தெரிந்தது தண்ணீர் பாட்டில் வைக்க வில்லை.

அன்னிக்கு ஸ்கூலில் அவளுடைய வகுப்பில் எல்லாரும் துபாய் ஜூ (ZOO) போவதால் ரெண்டு சிப்ஸ் பாக்கெட் & ஒரு ஜூஸ் கொண்டு போனாள். ஜூ போகிற ஆர்வத்தில் அன்று கிளம்புவது கொஞ்சம் சுலபமாய் இருந்தது.

எப்போவோ லீவு நாளில் வேலை (????) செய்ததால் ஒரு லீவு எடுத்து கொள்ளலாம் என்பதால் , அன்று லீவு, நாமும் ஜூ போனால் என்ன என்று தோன்றியது, உடனே செயல் படித்தியும் விட்டேன்...அங்கு போனால், ஒரு நூறு குழந்தைகள், ஒரே சத்தம், என்னை பார்த்தவுடன் அவள் அங்கும் இங்கும் ஒரே ஓட்டம் தான், துபையில் உள்ள கொரில்லா கொரங்கு ( இதில் உள் குத்து ஒன்றும் இல்லை ) , ரொம்ப கொழுபெடுத்தது, ஓரமாய் போய் தண்ணியை வாய்ல போட்டு, கம்பி கிட்ட வந்து .....சுர்ர்ர்ந்ன்னு துப்பும், குழந்தைகள் எல்லாரும் எதிர்பாக்காமல் இருக்கும் சமயத்தில் துப்பும், ஒரே சத்தம் தான் !!!!!!!!.









ஜூ போவதற்கு முன், வழக்கம் போல அடை மாவை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைக்க வில்லை, திரும்பி வந்தவுடன் தான் வைத்தேன்

மதியம் சாதம் வைத்தேன் , பருப்பு வேக வைக்கலாம் என்றல் கடலை பருப்பு தெரியும், அது போலவே உ.பருப்பு தெரியும் அது தவிர இரண்டு வகை பருப்பு இருந்தது, இங்கி பிங்கி பாங்கி போட்டு அவ்வளவா மஞ்சள் இல்லாத பருப்பை வேக வைத்தேன். உருளை கிழங்கு கறி செய்தேன், அது உருளை கிழங்கு கரி ஆகி விட்டது . ரெண்டு மூன்று தடவை மொளகா பொடி, மஞ்சள் எல்லாம் போட்டு அது ஒரு மாதிரி இருந்தது .

மகள் வந்தவுடன், சப்ஜி எல்லாம் பன்னிஇருக்கேன் என்று சொன்னவுடன் " அப்பா உனக்கு இது எல்லாம் பண்ண தெரியுமா என்றாள்" ...அப்பாவை பத்தி நீ என்ன நினைச்ச .... இதுவும் செய்வேன் , இதுக்கு மேலயும் செய்வேன் என்று மார் தட்டி கொண்டேன் ( அங்க தான் தப்பு நடந்துடுச்சு ... சாப்பிடுகிற வரை பொறுமை காத்திருக்கலாம் ) ... கிழங்கு கறி, ரொம்ப காரமா இருந்தது என் மகளுக்கு, ஒரு பீஸுக்கு மேல் தொடவில்லை, ஆனால் பருப்பு / சாதம் இருந்ததால் பிழைத்தேன்.

காலைல ரொம்ப சீக்கரம் எழுந்ததால் தூக்கம் கண்ணை சுற்றியது, சாதரணமாக 4.00 மணிக்கு டியூஷன் செல்லும் மகளும், என் கூட படுத்து தூங்கி விட்டாள்.

அன்று கராமா சென்டரில் ஒரு கச்சேரி இருந்தது, நாகை முரளிதரன் அவர்களின் வயலின், ஏழு மணிக்கே நானும் மகளும் ஆஜர், அப்பொழுதுதான் மைக் டெஸ்ட் செய்து கொண்டிரிந்தார்கள், ஒரு எட்டு மணி இருக்கும் பொழுது தான் ஆரம்பம் ஆகியது, திரு. முரளிதரன் ஒரு இளைஞன் தான் ஆனால் அருமையான கலைஞ்சர் , முன்பே ஒரு முறை கேட்டுஇருக்கிறேன் ... இம்முறை என் பெண் விடுவதாக இல்லை, ஒன்பது மன்னிக்கு முன்னே, அப்பா பசிக்குது ( சந்தைக்கு போனும், காசு கொடு ) என்று ராகம் பாட ஆரம்பித்து விட்டாள், உடனே அதே இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் போய் வெஜ் புலாவு , டால் ப்ரை, ஒரு பட்டர் நான்.... நான் மட்டும் நானை சாப்பிட்டேன், மற்ற எல்லாவற்றையும் அப்படியே பாக் செய்து வாங்கி கொண்டு , திரும்பி வீட்டுக்கு வந்து விட்டோம், .... வரும் பொழுதே காரில் தூங்கி விட்டாள். ஒரு வழியாக நாள் 1 முடிந்தது

வெள்ளி கிழைமை இங்கு லீவு நாள் தான், ஆதலால் ஸ்கூலுக்கு போகணும் என்ற அவசரம் இல்லை... எதோ பேருக்கு கொஞ்சம் படித்தோம், ( காலை டிபன் அருகில் உள்ள பாலாஜி பவனில் ) ..பின் கச்சேரியில் பார்த்ததினால், ஈத் விடுமுறைக்கு ராதா கல்யாண மஹோத்சவம் வருகிறது என்று அறிந்தேன், யசோதா நாட்டியம் செய்வாளா என்று கேட்டார்கள்... அது மாதிரி ஒரு வாய்ப்பு வராதா என்று ஏங்கி கொண்டிரிந்தேன், உடனே அதற்கான பயிற்ச்சிக்கு கொண்டு போனேன்...

அது முடிந்து திரும்பும் வழியில் அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு போன பொழுது, குழந்தை மட்டும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டாள். திரும்பவும் ஜூ போக வேண்டும் என்று பிளான் பண்ணி, அவர்கள் வீட்டு குழந்தை, நான், யசோதா, & அவர்கள் வீட்டுக்கு வந்த ஒரு மாமா நாங்கள் நால்வரும் திரும்பவும் ஜூ. திரும்பி வரும் பொழுது நிறைய மேகங்கள் உலகிலேயே உயரம் அதிகம் உள்ள புர்ஜ் டவரை, தழுவி கொண்டு சென்றது,... அதையும் பார்த்து கொண்டு ஒரு வழியாக திரும்பவும் வீடு வந்தோம்.





அடை மாவு நிறைய இருந்தது, புளிக்க தொடங்கியதால் நிறைய நாள் தாங்காது, அதே நண்பர் + குடும்பத்தை டின்னருக்கு கூப்பிட்டேன், அவர்களும் வந்தது ரொம்ப நிறைவாக இருந்தது. முன் தினம் சாபிடாமல் பாக் செய்து கொண்டு வந்த, வெஜ் புலாவ் ரொம்ப உபயோகமாக இருந்தது ( இதே மாதிரி முன்பு, ஒரு முறை ஒரு குடும்பத்துக்காக தனியாக சமைத்து , அவர்கள் வாராமல் போக, பின் வேறு ஒரு பெரிய வீட்டு குடும்பத்தை அழைத்து, எல்லாரும் வந்து சாப்பிட்டது இன்னும் மனதில் ஒரு வித நன்றியுடன் உள்ளது .... )

சனிக்கிழமை .... காலையில் பாலாஜி ஜிந்தாபாத், அப்பறம் டியூஷன், மதியம் சாப்பாடு வுட்லண்ட்ஸ் ஜிந்தாபாத்.... ஒரு வழியாக இந்த மூன்று நாட்கள் மறக்க முடியாதது

சாதாரணமான மூன்று நாட்கள் தான் , ஆனால் மிகவும் சந்தோஷமாக கழிந்தது .

செவ்வாய், 17 நவம்பர், 2009

பிடித்தவை, பிடிக்காதவை

சரி இந்த விளையாட்டை விளையாடி விடுவோம் .... தொடர் பதிவான , பிடித்தவை, பிடிக்காதவை, அன்பு நண்பர் கார்த்திக் அழைத்ததாலும், இது போன்ற தொடர் விள்ளையாட்டு பதிவுலகின் occupational hazard என்பதாலும் , இனி எனக்கு பிடித்தது, பிடிக்காதது :-

1. இசையமைப்பாளர்:-

பிடித்தது:- இளையராஜா ... அவரோட பெஸ்ட் பீரிடில்,நான் கல்லூரி மாணவன் 79 -82, சும்மா ஊர் சுற்றி கொண்டு, சில சமயம் பெண் பின்னாடி போய், கழுத்து வரை முடி வைத்து கொண்டு ....அது ஒரு கனா காலம், அந்த பாட்டுகள் , இசை, அதெல்லாம் மறக்கவே மறக்காது



பிடிக்காதவர் :- S.A.ராஜ் குமார் ... அவரு போட்ட நல்ல பாடல்கள் தெரியாததோ என்னோவோ, .... ஷங்கர் ( கணேஷ் ) .... அப்பறம் இப்போ அந்த குருவி பட இசை அமைப்பாளர் ..ஏதோ ஒரு பிரசாத்.

பாடகர் :- எஸ்.பி பி, ஷங்கர் மகாதேவன் ( நம்புங்க இவர் ஒரு அருமையான பாடகர் ) , பி.பி. ஸ்ரீநிவாஸ், எம்.ஜி, ஸ்ரீகுமார், ஜேசுதாஸ், டி.எம். எஸ்.... சாதரணமா எல்லாரையும் பிடிக்கும்.

பிடிக்காதவர் :- குத்துப் பாட்டு பாடற எல்லாரும், சில சமயம் எம்.எஸ் வி ( ஏண்டி முத்தம்மா ...ஏது புன்னகை ....) சில சமயம் மிமிக்ரி செய்த ஜானகி அம்மா,

எழுத்தாளர் : கல்லூரி நாட்களில் ர.சு. நல்ல பெருமாள் எழுதிய போராட்டங்கள் இன்னும் கொஞ்சம் நினைவுல இருக்கு, ஆனால் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா தான், சிவசங்கரி, வாஸந்தி, லக்க்ஷிமி எழுதியதையும் நிறைய படித்திருக்கிறேன், தீபம் நா.பாவின் அறிமுகம் உண்டு ( கலைமகள் மூலமாக ), சுபா, ரவி , சுப்பிரமணிய ஷிவா ( சாவி மூலம் ) ..கல்கி மிகவும் ரசித்த ஒரு எழுத்தாளர், நிறைய நாள் கழித்து தி.ஜாவின் அறிமுகம் கிடைத்தது ( மோக முள், மரப் பசு ....மறக்கவே முடியாது ) இதை எப்படி வரிசை படுத்துவது என்றே தெரிய வில்லை ... பாலகுமுரனும் பிடித்த லிஸ்டில் உண்டு. ஜெயமோஹனை படிக்கணும் இனி.

பிடிக்காத ..இதை சொல்வது ரொம்ப கஷ்டம், சாருவை வேணும்னா சொல்லலாம், படிக்காமலே சொல்றேன் , ரொம்ப அலப்பறை போல ....ஒரு வேளை படித்தால் கருத்தை மாற்றி கொள்ளலாம்

பிடித்த இயக்குனர் :- பாலசந்தர்
பிடிக்காத இயக்குனர் :- பாலசந்தர்
( நீங்களே காரணத்தை அவர் அவர் விருப்பம் போல் எடுத்துகொள்ளவும் )

பிடித்த நடிகர் :- ரஜனி காந்த் , கமல், ( கொஞ்ச நாள் இல்ல நிறைய நாள் முன்பு வரை ) இப்போ விக்ரம், ......இன்னும் பலர்
பிடிக்காதவர் : விஜய், ( இது வரை புரியாத மர்மம், மொதல்ல அப்பா படம் எடுத்தார், அவரே டைரக்ட் செய்வார், டப்பிங் சுரேந்தர் ( மாமா ), அம்மா பாட்டு என்று கேள்வி -இது சரியாக தெரியாது, ஆஸ்தான நாயகி சங்கவி ...படம் காலை காட்ச்சிக்கு மட்டும் தான் , ( என்னா ஒரு கலை குடும்பம் ) ....

பிடித்த நடிகை :- ஸ்ரீ தேவி , ஸ்ரீ தேவி , ஸ்ரீ தேவி




பிடிக்காத நடிகை :- , இப்போ உள்ள பெரும்பாலான கதா நாயகிகள் - குறிப்பாக திரிஷா, நயன தாரா, ...இன்னும் பல

பிடித்த அரசியல்வாதி :- ஜெயலலிதா தான்

பிடிக்காத அரசியல்வாதி :- அண்மை வரை குண்டர் தலைவர், திடீர் என்று தேர்தல், மத்திய அமைச்சர் என்று புதிய பதவி, பேர் ..... அழகிரி தான்.

பிடித்த தொழில் அதிபர் :- நிறைய பேர் உண்டு, மறைந்த ஆர்.எம். கே. வி விஸ்வநாதன், அண்மையில் சரத் பாபு, என்னுடைய நண்பன் போஜி, மாமா பையன் ஸ்ரீநிவாசன் ....

பிடிக்காத தொழில் அதிபர் :- கருணாநிதி தான் ( என்ன சொன்னாலும் அவர் தொழில் அதிபர் தான், சொத்து சேர்ப்பது, வாரிசை உருவாக்குவது , பொய் சொல்வது, பசப்பி மழுப்புவது, கேள்வி பதில் ரெண்டும் ஒரே ஆள் .. ( நன்றி நர்சிம் )

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும் (எங்கே? தொடர் பதிவுன்னாலே கருங்கல்லை கொண்டு அடிக்கிறாங்கஜி)

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
பதிவர் ஷமீர் அஹமத், இவரும் என்னுடைய திருச்சி தான். <ஜீவன்பென்னி பதிவுகள்> என்ற பெயரில் பதிவுகள் எழுதுகிறார்.




பதிவர் சிம்ம பாரதி

பதிவர் கீழை ராஸா

சனி, 10 அக்டோபர், 2009

என் ஸ்வீட் , காரம் & காபி

எல்லாரும் அவியல் / பஞ்சாமிர்தம் / கலக்கல் / கஞ்சி/.சான்ட் விச் ... இப்படியெல்லாம் எழுதுவது போல் நான் எழுத வந்தது SKC அதாவது ஸ்வீட் , காரம் , காபி, ... எங்க ஊர்ல , அதாவது திருச்சி BHEL , கைலாசபுரத்தில் ....அங்க வேலை பார்கற தொழிலாளி எல்லாம் ஒரு தீபெட்டியை சுண்டி அது விழும் பக்கத்தை வைத்து காசு வைத்து விளையாடுவார்கள் ... அதுல ஜெய்ச்சா SKC ... அது ... கடலை மிட்டாய் , முறுக்கு, டீ... ( ஆறு காசு )

BHEL லில் NMR வேலை என்றால் ரொம்ப பெரிய வேலை என்று நினைத்த காலம், காலனிகு உள் வரும் மாடுகளை எல்லாம் வெரட்டனும் . அந்த NMR வேலை கிடைக்கனமேன்னு வேண்டாத கடவுள் இல்லை... விதி வலியது, எங்கெங்கேயோ கூட்டி கொண்டு போய் இப்போ இங்க... ( ரொம்ப நாட்களுக்கு முன் ஒரு பதிவில், சே படிக்காமல் இருந்திருந்தால் ... இப்படி வேலை, பணம், அலைச்சல் , பிரஷர்...இது ஒன்றுமே வந்திருக்காது. ..ரொம்ப சரியான வார்த்தை - என்ன சொல்றீங்க !!!!!)

இனி என் ஸ்வீட் , காரம் & காபி

சமீபத்ல ரொம்பவும் . மனது கஷ்டப்பட்ட நியூஸ் , தேக்கடி படகு விபத்து . கொஞ்ச நாட்களுக்கு முன் அங்கு சுற்றுலா போன என் மாமா பையன், அதே படகு சவாரிக்கு போக ஆசைப்பட்டு, டிக்கெட் ட்ரை பண்ணினான் ஆனால் ..அங்கு ஒரு பெரிய மாபியா இருக்கு , காலை 5 மணிக்கு டிக்கெட் வாங்க போனால் கூட , நாலைந்து பேருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள், என் மாமா பையன் விட வில்லை, இரண்டு நாள் பார்த்து விட்டு , மூன்றாவது நாள் பெரிய சண்டை போட்டான் ( சத்தம் ) ... யாரும் உதவிக்கு வர வில்லை ..கிட்ட தட்ட அந்த கும்பல் அவனை ஏளனம் செய்து அடிக்க வந்தார்கள் அவன் அந்த படகு பயணம் போகாமலே திரும்பி வந்து விட்டான் ... ஏன் என்றால் அத்தனை டிகட்டும் ப்ளாக்கில் .... அதற்க்கு அங்கு உள்ள அதிகாரிகள் , போலீஸ், ஏஜென்ட் எல்லாரும் உடந்தை. நான் போய் இருந்தால் கூட ப்ளாக்கில் வாங்கிருப்பேன்.... அதை நினைத்தால் மனம் கூசுகிறது. இப்படி ப்ளாக்கில் பணம் செய்றவங்க எங்க படகின் பாதுகாப்பை பத்தி யோசிச்சிருப்பாங்க ..சான்சே இல்லை ..கம்யுனிசம் ஒன்றும் கரை படியாத கட்சி இல்லை, நம்ப கரை வேட்டி போல அங்க பூந்து விளையாடறாங்க.


அப்படி நிறைய பேர் வாங்காமல் இருந்தால்/ இருந்திருந்தால் , நிறய பேரை படகுல ஏத்திருக்க மாட்டாங்க, அந்த லைப் ஜாக்கெட் கிழே எங்கோ பிரிக்கப்படாமல் இருந்திருக்காது , அதன் சூபர்வைசரோ அல்லது மானேஜர்.. அதை எப்படி யூஸ் செய்யணும் என்று விவரித்திருப்பார்கள் ...அந்த படகு மூழ்கி இருந்தாலும், அதை ஓட்டிய டிரைவர் / மற்றும் இதர பணியாளர்கள் நீச்சல் தெரிந்த மற்றும் பலர் , பத்து உயிர்களை காப்பாற்றினார்கள் என்று செய்தி வந்திருக்கலாம் ...சின்ன ப்ளாக்ல டிக்கெட்டு என்னவெலாம் செய்கிறது பார்த்தீர்களா???



உன்னை போல் ஒருவனும் பார்க்கலை, புதன் கிழமையும் பார்க்லே, அனால் அந்த விஜய் டிவி , கமல் ப்ரோக்ராம் பார்த்தேன், ... தீவிரவாதத்துக்கு தீவரவாதம் தான் தீர்வுன்னு கிடையாது, உரையாடல் வேண்டும் , பேச்சு வார்த்தை வேண்டும், என்று ரொம்ப க்ளியராவே சொன்னார். ... ஆனால் இந்த செக்யூலியர் பதிவர் மற்றும் பின்னூட்ட இடுபவர்கள் தொல்லை தாங்க முடியலே ... எல்லார்க்குமே தெரியும் இந்த கதை இது தான் என்று ... ஒரு வேளை, கதையிலே அந்த குஜராத் கரசேவர்கள் எல்லாம் கோத்ராவில் தானே தன் வண்டிக்கு தீ வைத்து பழியை வேறு பக்கம் போட்டு சதி செய்தார்கள் என்று சொல்லி இருக்கலாமோ ?? நன்றி லல்லு பிரசாத் யாதவ் ன்னு ஒரு கார்டு போட வேண்டிஇருக்கும் !!!!!



இப்போ இது சுற்றுலா சீசன் - துபாய்க்கு வெகு அருகில் ஆனால் ஓமான் நாட்டில் முசுந்தம் அப்படின்னு ஒரு இடம் இருக்கு, துபாய் லேந்து ஷார்ஜா போய் - ராசல் கேமா போய் அங்க ஒரு Barder செக் போஸ்ட் இருக்கு , அங்கிருந்து ஒரு அரை மணி நேர பயணம், பாதை மிக மிக ரம்யமாக இருக்கும் ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வண்ணத்தில் கடல் . முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க , சாப்பாடும் கிடைக்கும் படகுல, அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது , கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி, யாருக்கு வேண்டுமோ / தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம்.

அப்படி நான் செஞ்ச ஒரு குனஸ்ட்டை....




ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வன்னந்தில் கடல் ... முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க ... சாப்பாடும் கிடைக்கும் படகுல,.அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், .... நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது ... கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி ... யாருக்கு வேண்டுமோ . தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம். துபாயில் இருந்து போய் வருவது மிக எளிது . வேண்டுமானால் ஒரு நாளில் போய் திரும்பி வரலாம் ..இல்லை, அங்கே தங்கலாம் , ஹோட்டல்கள் உண்டு

இங்க போடோ எல்லாம் பார்க்கலாம்











வெள்ளி, 11 செப்டம்பர், 2009

மறக்க முடியாத மசாய்மாறா - கென்யா











 
Posted by Picasa




ஒரு நல்ல இரவு நேரத்தில் துபாயில் இருந்து கென்யா விமானம் மூலம் நைரோபி -
கென்யா போனோம், விமான நிலையம் நம்ம திருச்சி விமான நிலையம் போல , இல்ல இல்ல, திருவனந்தபுரம் விமான நிலையம் போல இருக்கும், ... எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்கா மக்கள் !!!!!!.

எங்களை மாலை போட்டு வரவேற்றார்கள் எங்களை அழைத்த டூரிஸ்ட் ஆபிஸ் பணியாளர்கள். குடிக்க தண்ணீர் எல்லாம் வைத்து, ஐஸ் டவல் தந்து அசத்திட்டாங்க ... போற வழியிலேயே , எங்க போக போறோம், இந்த வண்டியிலேயே போக போறோம், பிரேக் பாஸ்டுக்கு நிறுத்தி உடனே ஐந்து மணி நேர வேன் பயணம், அதில் கடைசி இரண்டு மணி நேரம் ரோடு கிடையாது ..என்று சொல்லிவிட்டு கூட வந்த பெண் இறங்கி விட்டாள் . இனி டிரைவர் , கைடு எல்லாமே அந்த ஒரு ஆள் தான் .

கென்யாவின் தலை நகர் நைரோபி, நம்ம சென்னை மாதிரி இருக்குன்னு சொல்லலாம், கொஞ்சம் பெரிய கட்டிடங்கள், ஓரளவுக்கு நல்ல சாலை , சிக்னல் , ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூட பார்த்தோம், சாலையில் வண்டிகள் எல்லாம் பயங்கர பழசு , துபாயில் வண்டிகளை பார்த்த பிறகு, லண்டன் ல ஓடுற வண்டி கூட பழசு மாத்ரி தெரியும் . போற வழியில் ஒரு பெரிய ஸ்லம்மை கடந்து போனோம், ஒரே மக்கள் கூட்டம், நிறைய கடைகள், பெட்டி கடைகள், பிளாட்பாரம் கடைகள் , காய்கறி, பழம் , மாட்டு இறைச்சி, ... எதோ நம் ஊரை பார்ப்பது போலேவே இருந்தது

போகிற வழியில் ஒரு கால்ப் கோர்ஸ் கூட பார்த்தேன் . ஒரு சில பங்களாக்கள் , நல்ல வீடுகள், பெரும்பாலும் மிகவும் சாதரண கடை, வீடு , ஏழை மக்கள். அப்பப்ப குழைந்தைகள் சீருடையில் , ஆனால் பெரிய காலேஜ் அல்லது பிரம்மாண்டமான ஸ்கூல் பார்க்கவே இல்லை, அது உள் பக்கமாக இருக்கலாம் , என் கண்ணில் படவில்லை ...

போகிற வழியில் ஒரு பெரிய மலை உச்சியில் நிறுத்தினார் எங்கள் டிரைவர். அங்கிருந்து ரொம்ப தொலை தூரம் வரை நன்றாக தெரிகிறது, டிரைவர் சொன்னது அங்கிருந்து ஜோர்டான் தெரியும் என்று..அவர் ஏதோ அளந்து விடுகிறார் என முடிவு செய்து பார்த்தேன், நிறய தூரம் தெரிந்தது ... நடுவில் ஊரோ, கட்டிடமோ ஒன்றும் கிடையாது ..

அவர்கள் சொன்ன நல்ல சாலையும் அவ்வளவு நன்றாக இல்லை, ரொம்ப மோசம் தான் இருந்தாலும் இரவில் பிரயாணம் செய்த களைப்பால், வண்டியின் குலுங்களுக்கு தூங்க முயற்ச்சித்து, ஓரளவுக்கு தூங்கினேன், கொஞ்ச நேரத்தில் சாலை முடிந்தது, இப்பொழுது சாதரண மண் சாலை தான், போகும் வழியிலேயே நிறைய மாடுகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது , திடீரென ஒரு வரி குதிரை கூட்டத்தை பார்த்தவுடன் வண்டியில் எல்லாரும் பரவசமானோம், டிரைவர் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தார், அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.

ஒரு மணி நேரம் சாலை இல்லா மண் வழியில் பயணித்த பிறகு, ஒரு இடத்தை அடித்தோம், அது தான் மசாய் மாரா . அங்கிருந்து ஒரு அரை மணி நேர சாலை இல்லா காட்டில் பயணம் செய்து , நடு காட்டில், உள்ள ஒரு மாறாஸிம்ஹா என்ற ஒரு ரிசார்ட்க்கு போனோம்.



ஏறியவுடன், எல்லாருக்கும் குளிர் பானம், நேர எங்கள் அறைக்கு சென்றவுடன் , நாலு மணிக்கு தயாராய் இருக்கவும் என்று டிரைவர் சொல்லிவிட்டு போனார். அந்த ரிசார்ட் ரொம்ப நல்லா இருந்தது, நிறைய மரங்கள் - தரைக்கு, தூணுக்கு, சுற்றிலும் நிறைய மரங்கள், செடிகள் பக்கத்ல எந்த கட்டிடமும் கிடையாது, எந்த ஊரும் கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் கம்பம் கிடையாது , மின்சார கம்பம் கிடையாது. அத்வான காடு என்ற சொல்லுக்கு சரியான பதம், தீடீரென்று காத்து சத்தம் நன்றாக கேட்கிறது. அங்கு சத்தமே கிடையாது.

விமனாதில் தூங்காமல் வந்தது , அந்த ஆறு மணி நேர சாலை பயணம் அவ்வளவு சுகம் இல்லை, நன்றி சாலைக்கு !!!!, ..எல்லாம் சேர்த்து முதலில் எப்படா ரிசார்ட் போய் சேருவோம் என்றிருந்தது .... அதனால், அந்த மசாய் மாரா என்ற அந்த காட்டை வரும் பொழுது சரியாக பார்க்க வில்லை ... இப்போ நான்கு மணிக்கு ரெடியா இருங்க, என்று டிரைவர் சொல்லி விட்டார்.

நான்கு மணிக்கு காமிரா சகிதம் கிளம்பி விட்டோம் ..அந்த டயோட்டா வேனில் , கூரையை மாற்றி ..சற்று மேல் தூக்கி வைக்க முடியும், அப்பொழுது , நாம் வேனில் நின்று கொண்டு பயணம் செய்தால் , நாலா பக்கமும் நல்ல வீயூ. ... நன்கு பரந்து விரிந்த காடு, ஆனால் நிறைய மரங்கள் கிடையாது... ரெண்டு அல்லது மூன்று அடி உயரம் இல்ல புல், சில இடங்களில் மரங்கள் ... வீடு கிடையாது, ரோடு கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் / மின்சார கம்பங்கள் கிடையாது .... மனதில் மெதுவாக அந்த இடத்தின் அழகு ஆக்கிரமிக்க தொடங்கியது ..

போகும் வழியில் முரட்டு காட்டு எருமையை பார்த்தோம் ... ரொம்ப ஜாக்ரதையா இருக்குனும் என்று டிரைவர் சொன்னார், வண்டியை நெம்பி தள்ளி விடுமாம் ... கொஞ்ச நேரம் வண்டியை ஓட்டிய பிறகு, டிரைவர் வயர்லஸ் மூலம், எதோ செய்தி வந்தது ..அவரும் உடனே வண்டியை வேகமாக செலுத்தினார் ..அங்கு போனால், நிஜ சிங்க கூட்டம், ஒரு பெண் சிங்கம் படுத்து கிடந்தது... ஆண் சிங்கம் அங்கும் இங்கும் நடந்து ..சில சமயங்களில் பெரிய சத்தத்தை கொடுத்து..எங்களை போலவே இன்னும் ஒரு நான்கு வேன்கள் அங்கு இருந்தது.. எல்லாரும் அமைதியாய் காமிராவில் சுட்டு கொண்டிருந்தனர் ... தீடீரென்று அந்த ஆண் சிங்கம், பெண் சிங்கம் மேல் பாய்ந்து ... தன தாகத்தை தனித்தது... எங்கள் வேனில் இருந்த சிறுவர்கள் சிரித்த பொழுது, டிரைவர் சத்தம் போட வேண்டாம் என்று சொன்னார் ... திரும்பும் பொழுது, அந்த பரந்து விரிந்த காடு, மாலை நேரத்து மஞ்சள் வெயில், தூர தெரியும் மலை, அலைந்து திரியும் மேக கூட்டங்கள்... அந்த அமைதி, சத்தமில்லா அந்த அமைதி ... அதற்க்கு கூட ஒரு சத்தம் உண்டு என்று அறிந்த சமயம் அது....

இரவு நேரத்தில் சாதரணமாக எல்லாரும் ரீசார்ட்டுக்கு திரும்பி விடுவார்கள் ... நல்ல உணவு, பக்கத்தில் உள்ள மலை வாழ் / காடு வாழ் மக்களின் நடனம் என்று கழிந்தது ...காலையில் ஆறு மணிக்கே ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டார்

காலையில் ரெடியாக இருந்தோம் ... காலை நேரம் மிருகங்களை பார்ப்பதற்கு மிகவும் உகந்த நேரம் - அது உணவுக்காக வெளியில் வந்து திரியும் நேரம் - கூரையை உயர்த்திய வண்டி - நாலா பக்கமும் நல்ல வீயூ - கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித சஞ்சாரமே கிடையாது, சாலை இல்லை, கடை கிடையாது, கட்டிடங்கள் கிடையாது, போஸ்டர் கிடையாது .... நிறைய மரங்களும் இல்லாததால், நிறைய தூரம் பார்க்க முடியும், அலை பாயும் மேகங்கள், தூர தெரியும் மலைகளின் இடையே ஓடிபிடித்து விளையாடும் கதிரவன்.... வித விதமான மான், நிறைய மான் குட்டிகள், வண்டியை அந்த இடத்தில நிறுத்தி இன்ஜினை நிறுத்தியவுடன், ...ஆஹா அந்த அமைதி - அந்த மௌனத்தற்கு கூட ஒரு சத்தம் உண்டு, மொழி உண்டு, மௌனம் பேசியது - அதை கேட்க்க முடிந்தது, அதற்க்கு வாசம் கூட இருந்தது, அது மூளையை பை பாஸ் செய்து விட்டு நேராக இதயத்துடன் உரையாடியது... அது ஒரு சுகானுபவம் .


ஒரு நாள் வேகமாக ஒரு மரத்தின் அடியில் பார்க்க வேகமாக ஓடினோம் ... வண்டியில் தான் ( வண்டியை விட்டு வெளியில் வர நினைக்க கூட முடியாது )... அப்பா, அந்த சிறுத்தையின் பார்வை, நடையின் ஒரு அலட்ச்சியம்... கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மேலே... அது மாலை நேரம் என்பதால் கொஞ்சம் தொலை தூரத்தில் அந்த காளை/ குதிரை போல் உள்ள wild beast கூட்டம் கூட்டமாக.... சிறுத்தை மெதுவாக அடி மேல் அடி வைத்து ஒரு பாறையின் பின், .... அதுக்கு அப்பறம், அது ஒரு ஓட்டம் ஓடியது பாருங்க ... தொலை தூரத்தை, நொடி பொழுதில் அடைந்துருக்கும், அவ்வளவு தூரம் உடனே எங்களால் வண்டியில் போக முடியாது


அங்கிருந்து போகும் வழியில் ஒரு சிங்கத்தின் மூன்று குட்டிகளை பார்த்தோம், டிரைவர் சொன்னது, சிங்கம் குட்டிகள் கூட இருக்கும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ... பக்கத்தில் போக கூடாது என்றார். எனவே அங்கிருந்து வேற இடத்துக்கு போனோம், ...போகும் வழியில் ரெண்டு ஒட்டக சிவிங்கி சாலையில்... மெதுவாக அது முள் செடி பக்கம் நகர்ந்து, பெரிய பெரிய முள் உள்ள ( நம்ப ஊர் காகா முள்ன்னு சொல்வாங்க ..வெள்ளையா ரெண்டு மூணு அங்குலம் இருக்கும் ) .. மரத்தில் உள்ள இல்லையை அழகாக சாப்பிட்டது ... அந்த ஒட்டக சிவிங்கி நல்ல உயரம் , நல்ல நிறம் , நல்ல டிசைன் ... சில மணி துளிகளில் வரி குதிரை கூட்டம், அதன் அழகு சொல்ல முடியாது..என்ன ஒரு வரிகள், வெள்ளையும், கருப்பும் - பகலும் இரவும் போல ...

சில நிமிடங்களில் .. குதிரையும் இல்லாமல், காளையும் இல்லாமல் ..ஒரு படைப்பு..அது ஆயர கணக்கில் ... கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். மரம் உள்ள இடங்களுக்கு போகும் பொழுது ஆப்ப்ரிகா யானை(களை) பார்த்தோம், ஆஹா நம்ம கணபதி இங்க கூட இருக்காரே ... காது சற்று இல்லே ரொம்ப பெரியது. டிரைவர் எப்போதுமே யானைக்கு அருகில் செல்வதில்லை குறைந்தது ஒரு 20 /30 அடி இருக்கும். ஆனால் சிங்கம் அருகில் ஒரு சில அடிகள் கூட இருக்காது, அவ்வளவு கிட்ட போகலாம். வழியில் ஒரு பெரிய பறவையை பார்த்தோம் அதன் எடை ஒரு 15/20 இருக்கலாம் என்றார் ..அது பறப்பது அதிசயம் தான் ... போகிற வழியில் பெரிய வான் கோழிகள்,
வித விதமான மான்கள், புள்ளி மான், ஒரு மாதிரி மின்னும் ( brownish /golden ) மான்,
மரங்கள் உள்ள இடத்தில் அழகான பறவைகள் ...எல்லா மிருகங்களும் அருகருகில் , அது அது அதன் குடும்பத்துடன் !!!!... இந்த சிங்கம் /சிறுத்தை மட்டும் வேட்டையாடி சாப்பிடும் ... அதனால் நரி கூட்டமும் உண்டு , யப்பா இந்த நரி போடும் சத்தம் இருக்கிறதே, ஒரு மாதிரி இருக்கும். .... அங்குள்ள ஒரு ஆறு போன்ற இடத்தில் நீர்யானை, முதலை ..எல்லாம் அந்த காட்டில், இது போன்ற ஒரு மிருகம் வசிக்கும் இடம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என சொல்லலாம் ( டான்செனியா , சவுத் ஆப்ரிக்கா , போன்ற வேறு நாடுகளிலும் இது மாதிரி இடங்கள் உண்டு என்று கேள்வி ) ..

ஒரு நாள் காலை மசாய் மக்கள் வாழும் ஒரு குடிசை வாழ் இடத்திற்கு போனோம், முள்ளை பரப்பி வேலி அமைத்து, அதற்குள் நிறைய குடிசை, உயரமான ஆட்கள், சிவப்பு கம்பளி தான் சுற்றி இருப்பார்கள் , தூரத்தில் இருந்தே அடையாளம் தெரிவதற்கு. அவர்களின் சொத்து மாடுகள் தான், அது தான் கொடுக்கல் வாங்கல் எல்லாம், மாடுகளின் கழுத்தில் ரத்தத்தை எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் ... வீட்டில் பழைய புகை அடுப்பு தான், சோளத்தில் இருந்து எடுத்த மாவில் ஒரு வித கஞ்சி செய்து உண்கிறார்கள் ... மிகவும் கஷ்டம், ஒரு சாதரண அடிப்படை வசதி கூட கிடையாது... ஆண்கள் எப்போதும் ஒரு வித எலும்பு வைத்திருக்கிறார்கள் ..கை தடி மாதிரி . அவர்களை பார்த்தது ஒரு வித விதயாசமான அனுபவம்

அந்த ரீசார்டை நடத்துபவர் ...ஒரு இந்தியர் தான்னு சொன்னாங்க - நைரோபியில் நிறய இந்தியர் இருப்பதாக கேள்வி , நாங்க மசாய் மாறா மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டோம் - ரிசார்ட்டில் சைவ உணவு கிடைக்கும், ரொட்டி கிடைக்கும். பெரிய பெரிய பணக்காரர்கள் அல்லது இஸ்ரேலில் இருந்து வரும் டூரிஸ்ட்டுகள், பெரும்பாலும் அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் தான் வருகிறார்கள்

நான் ஓரளவுக்கு ஊர்கள் ( நாடுகள் ) பார்த்திருக்கிறேன் ... அனால் இந்த பயணம் எப்போதும் மனதை விட்டு அகலாது - மகள் வந்த பிறகு, அவளையும் அழைத்து கொண்டு போனது இன்னமும் சுவாரசியம், இனியும் வாய்ப்பு வந்தால் போக வேண்டும் ..

துபாயில் இருந்து போய் வருவதற்கு அவ்வளவு சிரமம் இல்லை , விமான கட்டணமும் சேர்த்து ஒரு ஆளுக்கு 3000 dirham ஆகலாம். அமேரிக்கா மற்றும் தூர தேச ஆட்கள், இந்தியா வரும் பொழுது நடுவில் ஒரு நாலு நாள் தங்கி இந்த இடத்தை பார்க்கலாம். ...